சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னை தண்டையார்பேட்டை, சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-07-10 19:50 GMT
பெரம்பூர், ‌ 

சென்னை தண்டையார்பேட்டை திருவள்ளுவர் நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் விவேக் (வயது 26). மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர், நேற்று காலை வீட்டில் இருந்து மூலக்கடை நோக்கி தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து புகை வந்ததால் சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அதற்குள் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. அருகில் இருந்த ஆட்டோவுக்கும் தீ பரவியது.

எழில்நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தது. ஆட்டோவுக்கு லேசான சேதம் ஏற்பட்டது. உடனடியாக மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி விட்டதால் விவேக் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்