மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர்
தமிழகத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து நேற்று கரூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் கரூர் ஆர்.எஸ்.எம். தபால் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.