தொழில் முனைவோர்களாக உருவாக விரும்பும் இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும் கலெக்டர் பேட்டி

தொழில் முனைவோர்களாக உருவாக விரும்பும் இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என கலெக்டர் பிரபுசகர் பேட்டியளித்தார்.

Update: 2021-07-10 19:32 GMT
கரூர்
மாவட்ட தொழில்மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களால் பயனடைந்து, தொழில் முனைவோர்களாக உருவாகி தற்போது சிறந்து விளங்கக்கூடியவர்களின் தொழில் நிறுவனங்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், கரூர் -சேலம் புறவழிச்சாலையில் கலர் ரூபிங் என்ற நிறுவனம், ஆத்தூர் அருகே உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம், கொசுவலை உற்பத்தி தொழிற்சாலை, செலோடேப் தயாரிக்கும் நிறுவனம், வீட்டு உபபோய ஜவுளி உற்பத்தி நிறுவனம், விளையாட்டு உபகரணங்கள் விற்பனை நிலையம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
பின்னர் அவர் கூறுகையில், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் தொழில் முனைவோர்களுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் இதுவரை 3 பயனாளிகளுக்கு ரூ.40 லட்சத்து 40 ஆயிரம் மானியத்திற்கான கடன் ஒப்பளிப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் 2020-21-ம் நிதி ஆண்டிற்கான கரூர் மாவட்டத்தின் இலக்கு 33 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 24 லட்சம் மானியம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில முதலீட்டு மானியம் திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கு, தகுதியான எந்திரங்கள் மற்றும் தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதமோ அல்லது அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை மாநில முதலீட்டு மான்யமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 14 நிறுவனங்களுக்கு ரூ.2 கோடியே 20 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது, இனிவரும் காலத்தில் தொழில்முனைவோர்களாக உருவாக விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் சிறப்பு பயிற்சிகள் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் .என்றார்.

மேலும் செய்திகள்