மின்வாரிய ஊழியர் தற்கொலை

மின்வாரிய ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-07-10 19:25 GMT
விக்கிரமசிங்கபுரம்:

சேர்வலாறு மின்வாரியத்தில் பணியாற்றியவர் வள்ளி முருகன் (வயது 47). இவர் தனது குடும்பத்துடன் மின் வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். வள்ளி முருகனுக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று வள்ளி முருகன் தூக்கில் தொங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வள்ளி முருகன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்