சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்
சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்;
வேலூர்
வேலூர் முள்ளிப்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்து காணாமல் போனார். அவரை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில், சிறுமியை அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 23) கடத்தி சென்றது தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று சிறுமி வீடு திரும்பினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சிவக்குமார் கடத்தி சென்று தொரப்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் வைத்திருந்ததும், அப்போது அவர் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிந்தது. போலீசார் தேடி வருவதை அறிந்து வீடு திரும்பியதாக சிறுமி தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கு வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. சிறுமிக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ரேகா போக்சோ சட்டத்தில் சிவக்குமாரை கைது செய்தார்.