காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.28 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்

காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.28 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.;

Update: 2021-07-10 17:34 GMT
காரைக்குடி,

காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.28 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்

காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு, அமெரிக்காவில் வசிக்கும் கண்டரமாணிக்கத்தை சேர்ந்த டாக்டர் நாச்சியப்பன் மற்றும் அவரது முயற்சியால் பெறப்பட்ட நன்கொடை மூலம் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி எந்திரங்கள் வழங்கப்பட்டது. அதன் மூலம் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டி உற்பத்தி நிலையத்தின் தொடக்கவிழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
 விழாவிற்கு ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி முன்னிலை வகித்தார். டாக்டர் நாச்சியப்பன் வரவேற்று பேசினார். தமிழக ஊராட்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை தொடங்கி வைத்து பேசினார்.

நிதி உதவி

பின்னர் டாக்டர் நாச்சியப்பனால் வழங்கப்பட்ட ரூ.1.10 லட்சம் மதிப்பீட்டில் இ.ஜி.சி. கருவி மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி ஆகியவற்றை தேவகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் கண்டரமாணிக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடத்திற்கு ரூ.1 லட்சம் நிதி உதவிக்கான காசோலையையும் மாவட்ட நிர்வாகத்திடம் அமைச்சர் வழங்கினார். இத் திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்து அதிகளவு நிதி உதவி வழங்கிய கலிபோர்னியாவில் வசிக்கும் மகேஷ், அருணாச்சலம் நியூஜெர்சியில் கண்ணன், ஆறுமுகம் ஆகியோரை அமைச்சர் பாராட்டினார். நிகழ்ச்சியில் எஸ்.மாங்குடி எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தென்னவன், காரைக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, தி.மு.க. மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, காரைக்குடி நகர செயலாளர் குணசேகரன், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.ஆனந்த், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னதுரை, சூரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முருகப்பன், சாக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் எஸ்.எம்.கே. சொக்கலிங்கம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், ராதா பாலசுப்ரமணியன், குன்றக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சாந்தி நாச்சியப்பன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்