வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து

செஞ்சி அருகே வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டனா்.;

Update:2021-07-10 22:59 IST
செஞ்சி, 

செஞ்சி அருகே உள்ள அனந்தபுரம் பனமலையை சேர்ந்தவர் முத்துலிங்கம் மகன் பிரபு(வயது 33). காங்கேயனூரை சேர்ந்தவர்கள் இளையராஜா(40), சத்தியன்(42). இவர்கள் பனமலை பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடித்தபோது தகராறு ஏற்பட்டது. பின்னர் நடந்து சென்ற பிரபுவை மடக்கி இளையராஜா, சத்தியன் ஆகியோர் தாக்கினர். மேலும் பீர் பாட்டிலை உடைத்து பிரபுவை சரமாரியாக குத்தினர். இதில் காயமடைந்த பிரபு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் |வழக்குப்பதிவு செய்து இளையராஜா, சத்தியன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.  இதேபோல் பிரபு மற்றும் சிலர் தன்னை தாக்கியதாக இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பனமலையை சேர்ந்த முருகன்( 32), ஜோதி(47) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்