ஊட்டி
ஊட்டி நகரை ஒட்டி உள்ள மார்லிமந்து பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக புதுமந்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் பணம் வைத்து சூதாடியதாக ராஜேந்திரன் (வயது 41), புவனேஷ் (23), மது (31), ரஞ்சித்குமார் (25), கிஷாந்த் (24), சுரேஷ் (28) ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து 240 பறிமுதல் செய்யப்பட்டது.