பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திண்டுக்கல்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் திண்டுக்கல்லில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் நற்பணி இயக்க மாநில துணை செயலாளர் சிவபாலகுரு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன், கட்டமைப்பு பிரிவு துணை செயலாளர் ஸ்டாலின், முன்னாள் பொறுப்பாளர் முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், அவற்றின் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதில் இளைஞர் அணி செயலாளர் பாரத்குமார். நகர செயலாளர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோல நெய்க்காரப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.