அம்மன் கோவிலில் நகை பணம் திருட்டு

உளுந்தூர்பேட்டை அருகே அம்மன் கோவிலில் நகை-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு;

Update: 2021-07-10 16:54 GMT
உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை புத்தூர் கிராமத்தில் பெரிய நாயகி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் காலை மர்ம நபர்கள் சிலர் இந்த கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் அம்மன் சிலையில் இருந்த 3 கிராம் தங்க நகை ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். 
இதை அந்த வழியாக ஆடு மேய்ச்சலுக்கு சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி கோவில் உண்டியலை உடைத்து, நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்