திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு
திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆறுமுகநேரி;
ஆத்தூர் முஸ்லிம் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக மாணவ-மாணவிகள் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றதையொட்டி ஆத்தூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கிளை சார்பில் ஆத்தூர் ஜூம்மா பள்ளிவாசலில் பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆத்தூர் போலீஸ்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தேவசகாயம், ஆத்தூர் த.மு.மு.க. கிளை தலைவர் இதுரிஸ், செயலாளர் மீராசா, பொருளாளர் சேக் முகமது, ஆத்தூர் ஜமாத் தலைவர் ஏ.எம்.எஸ். சேக் தாவுது, காயல்பட்டினம் த.மு.மு.க. நிர்வாகி முர்சித் மற்றும் அசன் முகமது, புகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.