காவலூர் அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

Update: 2021-07-10 16:15 GMT
வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள காவலூர் அருகே உமையப்ப நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், திருவண்ணாமலை மாவட்டம், சிங்காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது,

இதுகுறித்து மாவட்ட சமூக நலத்துறைக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது, அதன்பேரில் ஆலங்காயம் சமூகநலத்துறை அலுவலர்களும், காவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகபூஷணம் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட திருமண வீட்டிற்கு நேற்று மாலை சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் இரு தரப்பினரும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அங்கு அவர்களிடம் எழுத்து மூலமாக கடிதத்தைப் பெற்று பின்னர் அவர்களுக்கு அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்