மோட்டார்சைக்கிள் விபத்தில் பெண் சாவு

விளாத்திகுளம் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் பெண் இறந்தார்.

Update: 2021-07-10 16:14 GMT
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலோடையை சேர்ந்த ஆசீர்வாத செல்லையா என்பவருடைய மனைவி ரூபி (வயது 50). இவர் சம்பவத்தன்று இரவு தனது உறவினரான சோலையப்பன் என்பவருடன் குளத்தூரில் உள்ள மெடிக்கல் கடைக்கு மோட்டார்சைக்கிளில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். பனையூர் பூங்கா அருகே வந்தபோது மோட்டார்சைக்கிள் திடீரென பழுதாகி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் மோட்டார்சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த ரூபிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த ரூபியை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குளத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்