பலத்த மழைக்கு வீடு இடிந்தது
நயினார்கோவிலில் பலத்த மழைக்கு வீடு இடிந்து சேதமானது.
நயினார்கோவில்,
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் பகுதியை சேர்ந்த நாகன் மனைவி பழனியம்மாள். இவர்களின் வீடு நேற்று பெய்த கனமழையால் இடிந்து கீழே விழுந்தது. அப்போது பழனியம்மாள் குடும்பத்தினர் அதிர்டவசமாக உயிர் தப்பினர். சேதத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.