சந்தை கட்டணம் செலுத்ததாத வாகனங்கள் பறிமுதல்
சந்தை கட்டணம் செலுத்ததாத வாகனங்கள் பறிமுதல்
பொள்ளாச்சி
விவசாயிகளிடம் இருந்து வேளாண் விளை பொருட்களை வாங்கி, வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். இதில் சில வேளாண் பொருட்களை கொண்டு செல்வதற்கு வியாபாரிகள் சந்தை கட்டணம் செலுத்த வேண்டிய உள்ளது.
அதன்படி தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை (முறைப்படுத்துதல் சட்டத்தின்படி தேங்காய் உள்ளிட்ட விளை பொருட்களுக்கு வியாபாரிகள் சந்தை கட்டணம் செலுத்த வேண்டும்.
அந்தந்த பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சந்தை கட்டணத்தை செலுத்தி பொருட்களை கொண்டு செல்ல அனுமதி சீட்டு பெற வேண்டும்.
ஆனால் சில வியாபாரிகள் சந்தை கட்டணம் செலுத்தாமல் பொருட்களை கொண்டு செல்வதாக தெரிகிறது. இதுகுறித்து கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் கவுசல்யா மற்றும் ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் ஆகியோர் கூறியதாவது:-
தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை (முறைப்படுத்துத்தல்) சட்டத்தின்படி மஞ்சள், மிளகாய், நெல், பாக்கு, புகையிலை, பருத்தி பஞ்சு, கழிவு பஞ்சு, நிலக்கடலை மற்றும் இளநீர் நீங்கலாக அனைத்து வகை தேங்காய்க்கும் வியாபாரிகள் சந்தை கட்டணம் செலுத்த வேண்டும்.
வியாபரிகள் கொண்டு பொருட்களுக்கு ஒரு சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியமாகும். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, அன்னூர், நெகமம், கிணத்துக்கடவு, செஞ்சேரிமலை, கோவை, காரமடை, தொண்டாமுத்தூர், சூலூர் ஆகிய பகுதிகளில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.
தேங்காய் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் முறையாக சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் முறையாக சந்தை கட்டணம் செலுத்தி உரிய அனுமதி சீட்டு பெற வேண்டியது கட்டாயமாகும். இதை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படையினர், கண்காணிப்பாளர்கள் அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபடுவார்கள்.
அப்போது சந்தை கட்டணம் செலுத்தாமல், விற்பனை குழுவின் அனுமதி சீட்டு பெறாமல் செல்வது தெரியவந்தால் வாகனங்கள் மீது அபராதம் விதிப்பது, வாகனங்கள் பறிமுதல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
-