கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தாலுகாபகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தினசரி கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குளத்துபாளையம் பகுதியில் கொரோனாபரிசோதனை முகாம்நடைபெற்றது.
இதில் டாக்டர் லோகநாதன் சுகாதார துறை ஆய்வாளர் குணசேகர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.இதில் மொத்தம் ஒரே நாளில் 230 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக அதிகரிகள் தெரிவித்தனர்.