பிரதான குழாய் உடைந்து குடிநீர் வீணாகியது
பிரதான குழாய் உடைந்து குடிநீர் வீணாகியது
கிணத்துக்கடவு
பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்து பொள்ளாச்சியிலிருந்து குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிணத்துக்கடவு, குறிச்சி, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் ராட்சத குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல 24 மணி நேர தடையில்லா மின்சாரம் கோவை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் குறிச்சி- குனியமுத்தூர் பகுதிகளுக்கு குடிநீர் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை7.30 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. அப்போது கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழேகோவை- பொள்ளாச்சி மெயின்ரோட்டோரம் உள்ள ஒரு தனியார் பல்பொருள் அங்காடி கடை அருகில் தரையில் பதிக்கப்பட்டிருந்த குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் திடீரென விரிசல் அடைந்து உடைந்தது.
இதனால் குடிதண்ணீர் வீணாக ரோட்டில் ஓடியது. சில இடங்களில் குளம்போல் தேங்கியது. இதனால் அந்த அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, வேறு வழியாக திருப்பி விடப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட உதவிநிர்வாக பொறியாளர் பட்டன், இளநிலைபொறியாளர் சரவணகுமார் ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டு உடனடியாக குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,மின்தடை காரணமாக குடிநீர் குழாயில் ஏற்படும் அழுத்தம் காரணமாக சில நேரங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுவது சகஜம்.
ஆகவே தற்போது குழாயில் உள்ள தண்ணீர் அகற்றப்பட்டு குழாய் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.