‘தினத்தந்தி' செய்தி எதிரொலி: பட்டினப்பாக்கத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் உடனடி அகற்றம்

‘தினத்தந்தி' செய்தி எதிரொலி: பட்டினப்பாக்கத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் உடனடி அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Update: 2021-07-10 02:04 GMT
சென்னை, 

சென்னை பட்டினப்பாக்கத்தில் நொச்சிக்குப்பம்-சீனிவாசபுரம் இடையேயான மேம்படுத்தப்பட்ட நடைபாதையை ஆக்கிரமித்து ஓட்டல்கள், பெட்டிக்கடைகள் அமைக்கப்பட்டு இருப்பதையும், இதனால் பாதசாரிகள் வெளிப்படுத்திய மனக்குமுறல்களும் நேற்று ‘தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மாநகராட்சி அதிகாரிகள் குழு, நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த ஓட்டல்கள், பெட்டிக்கடைகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த கடைக்காரர்களும், அதிகாரிகள் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடைபாதை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி கொண்டனர்.

மேலும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பழைய வாகனங்கள், மீன் வலைகள், பழுதான வீட்டு உபயோகப்பொருட்கள் உள்ளிட்டவையும் உடனுக்குடன் அகற்றப்பட்டன.

இனி நடைபாதையை ஆக்கிரமித்து எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது எனவும், மீறும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அப்பகுதி பொதுமக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

நீண்டகாலமாக நிலவி வந்த பிரச்சினை தீர்வதற்கு காரணமாக இருந்த ‘தினத்தந்தி' பத்திரிகைக்கும், உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மீண்டும் நடைபாதையை மீட்டுக்கொடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்