மீசநல்லூர் கிராமத்தில் சாலையில் நாற்று நடும் போராட்டம்
சாலையில் நாற்று நடும் போராட்டம்
வந்தவாசி
வந்தவாசி அருகே மீசநல்லூர் கிராமத்தில் இருந்து நல்லூர் செல்லும் 2 கிலோமீட்டர் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக பழுதடைந்தது. இதை சரிசெய்ய வேண்டியும், சாலையை அமைத்துத் தர வேண்டியும் கிராம மக்கள் சார்பில் பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனாலும் சாலை அமைக்கப்படவில்ைல.
இதையடுத்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்தும், சாலையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் தருவதாக அறிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில துணைத்தலைவர் நந்தன், மாவட்ட தலைவர் சுந்தர், செயலாளர் அன்பரசன், வட்டார தலைவர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.