ஜேடர்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; எலக்ட்ரீசியன் பலி 2 பேர் படுகாயம்

ஜேடர்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; எலக்ட்ரீசியன் பலி 2 பேர் படுகாயம்

Update: 2021-07-09 22:47 GMT
பரமத்திவேலூர்:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 56) எலக்ட்ரீசியன். இவரது மகன் பிரபு (30). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு ஜேடர்பாளையத்திற்கு வந்தனர். பின்னர் மீண்டும் அம்மாபேட்டை செல்ல மோட்டார்சைக்கிளில் ஜேடர்பாளையம் அருகே ஜமீன்இளம்பள்ளி அருகே சென்றனர். அப்போது முன்னால் கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு ‌சென்ற டிராக்டரை முந்தி செல்ல‌ முயன்றபோது எதிரே வந்த‌ மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது.  இதில் மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற நாகராஜ் ‌டிராக்டரில் சிக்கி‌ படுகாயம் அடைந்தார். பிரபுவும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கரூர் மாவட்டம் சேமங்கியை சேர்ந்த தியாகு (36) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோடு ‌அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜ் உயிழந்தார். படுகாயம் அடைந்த பிரபு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையிலும், தியாகு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும்‌ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் ‌டிரைவர் பரமத்திவேலூர் ‌அருகே கொளக்காட்டுபுதூரைச் சேர்ந்த பெரியசாமியை (47) கைது செய்தனர்.

மேலும் செய்திகள்