ஆனி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

ஆனி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2021-07-09 22:23 GMT
சேலம்:
சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரத்தில் பிரசித்தி பெற்ற கரபுரநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆனி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து சாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
தேவூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று ஆனிமாத அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. தேவூர் அருகே உள்ள கல்வடங்கம் அங்காளம்மன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் தேவூர் அம்மன் கோவில், நல்லங்கியூர் முத்து மாரியம்மன் கோவில், சென்றாயனூர் மாரியம்மன் கோவில், பாங்கிகாடு அய்யனாரப்பன் கோவில், செட்டிப்பட்டி மாரியம்மன் கோவில், கொட்டாயூர் ஓங்காளியம்மன் கோவில், புள்ளாக்கவுண்டம்பட்டி மாரியம்மன் கோவில், வெள்ளூற்று பெருமாள் கோவில், காவேரிபட்டி தடிகரன் கோவில் ஆகியவற்றிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்