ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-09 21:15 GMT
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வன்(வயது 37). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி மாலதி என்ற மனைவியும், 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், கணவன்- மனைவி இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், மாலதி பலமுறை சொல்லியும் அவர் குடிப்பழக்கத்தை விடவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் குடும்ப தகராறை தொடர்ந்து மாலதி தனது தாய் வீட்டிற்கு செல்வதும், அவரை முத்தமிழ்ச்செல்வன் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருவதும் வழக்கமாக இருந்துள்ளது. மேலும் முத்தமிழ்ச்செல்வன் தற்கொலை முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கோபித்து சென்ற தனது மனைவியை, முத்தமிழ்ச்செல்வன் வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்ததால் மனம் உடைந்த முத்தமிழ்ச்செல்வன் மதுவில் களைக்கொல்லி பூச்சி மருந்தை(விஷம்) கலந்து குடித்துள்ளார். இதையடுத்து அவரை, உறவினர்கள் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்தமிழ்ச்செல்வன் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்