என்ஜினீயர் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு

கோவையில் என்ஜினீயர் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு போனது.

Update: 2021-07-09 21:06 GMT
கோவை

கோவை செல்வபுரம் நேரு காலனியை சேர்ந்தவர் அனித்ஜான் (வயது 36). என்ஜினீயர். இவர் கடந்த மே மாதம் 2-ந் தேதி தனது சொந்த ஊரான குமரி மாவட்டத்திற்கு சென்றார். அவர் தனது வீட்டின் சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து சென்றார். 

அவரது வீட்டை சுத்தம் செய்வதற்காக வேலைக்கார பெண் வந்து சென்றார். இந்த நிலையில் அனித்ஜான் கடந்த 5-ந் தேதி தனது குடும்பத்தினரு டன் வீட்டிற்கு வந்தார். 

அவர், வீட்டின் பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த தங்க வளையல், மோதிரம் உள்பட 11 பவுன் நகைகள், ரூ.8 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்