திருப்பரங்குன்றம், ஜூலை
திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வந்தவர் ராஜரத்தினம் (வயது 54). பெயிண்டர். இவர் உடல்நிலை சரி இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ராஜரத்தினம் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.