மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;

Update: 2021-07-09 20:00 GMT
சாத்தூர், 
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில்  வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக அதிகாலையில் அம்மனுக்கு  பால், பன்னீர், தேன், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. கொரோனா அறிவுறுத்தல் காரணமாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை  கோவில் செயல் அலுவலர் உதவி ஆணையர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர் ராமமூர்த்திபூசாரி, அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்