ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
சிவகாசி அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
விருதுநகர்,
சிவகாசி அருகே வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகம் முன்பு வருவாய்த்துறையினர் 43 ரேஷன் அரிசிமூடைகள் வேனில் கடத்தப்படும் போது வேனுடன் பறிமுதல் செய்து சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர். வேனிலிருந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதனை தொடர்ந்து சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் புலனாய்வு மேற்கொண்டு தென்காசி மாவட்டம் உமையத்தலைவன் பட்டியை சேர்ந்த சீனிப் பாண்டி (வயது 37), விருதுநகர் புலிப்பாறைப்பட்டியை சேர்ந்த ரமேஷ் (26) ஆகிய 2 பேரையும் கைது செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர்.