திருச்சி விமான நிலையத்தில் 8 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடி
திருச்சி விமான நிலையத்தில் 8 கிலோ கடத்தல் தங்கத்தை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செம்பட்டு,
திருச்சி விமான நிலையத்தில் 8 கிலோ கடத்தல் தங்கத்தை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தங்கம் கடத்தல்
திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இயக்கப்படும் சிறப்பு விமானங்களில் தங்கம் கடத்தி வருவதும், அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் 11.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கண்காணிப்பாளர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டது விமான நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.
8 கிலோ தங்கம் பறிமுதல்
இந்தநிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நேற்று முன்தினம் இரவு 4 சிறப்பு மீட்பு விமானங்கள் பல்வேறு நாடுகளில் இருந்து வந்தன. இந்த விமானங்களில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அந்த விமானங்களில் வந்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது அவர்களில் 6 பயணிகள் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து சுமார் 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் இது தொடர்பாக 6 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.