திருப்பூர்
திருப்பூரை சேர்ந்த 17 வயது மாணவிக்கும், தாராபுரத்தை சேர்ந்த விவசாயி சசிகுமார் வயது 24 என்பவருக்கும் கடந்த மாதம் 28ந் தேதி திருமணம் நடைபெற்றது. சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாக சைல்டு லைன் அமைப்புக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சமூக நலத்துறை மேம்பாட்டு அதிகாரி சிவகாமி விசாரணை நடத்தினார். விசாரணையில் பெருமாநல்லூரை சேர்ந்த புரோக்கர்களான அம்பிகா38, வள்ளி 35 ஆகியோர் சேர்ந்து மாணவியை சசிகுமாருக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகாமி அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார், குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ பிரிவின்கீழ் சசிகுமார், அம்பிகா, வள்ளி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.