600 பேருக்கு கபசுர குடிநீர்

திருப்புவனத்தில் 600 பேருக்கு கபசுர குடிநீர் வினியோகிக்கப்பட்டது.;

Update: 2021-07-09 18:28 GMT
திருப்புவனம்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்புவனம் கிளையும், திருப்புவனம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவும் இணைந்து தட்டான்குளத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் இலவச கபசுர குடிநீர் வழங்கும் முகாமை நடத்தியது.
முகாமிற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் காலித் தலைமை தாங்கினார். சித்தா பிரிவு மருந்தாளுனர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். கிளை பேச்சாளர் முஸ்ரப் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். முகாமில் 600 பேருக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்