குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு

நாங்குநேரி அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலியானான்.;

Update: 2021-07-09 18:21 GMT
நாங்குநேரி:

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆச்சிமுத்து மகன் சுடலை (வயது 32). மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை நாங்குநேரி அருகே சிங்கநேரியில் உள்ள தனது தங்கை பிச்சம்மாள் வீட்டுக்கு சுடலை தனது மகன் சுரேஷ் கண்ணனுடன் (4) சென்றுள்ளார். சுடலை வீட்டுக்குள் பேசிக் கொண்டிருக்கும் போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சுரேஷ் கண்ணன், அங்குள்ள சிறுவர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளான்.

அப்போது சுரேஷ் கண்ணன் திடீரென தவறி தண்ணீரில் விழுந்தான். இதனால் தண்ணீரில் தத்தளிப்பதை கண்ட மற்ற சிறுவர்கள் உடனே வீட்டிற்கு சென்று தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுடலை, அங்கு ஓடிச்சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்த சுரேஷ் கண்ணனை மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சுரேஷ் கண்ணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்