வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற மேலும் ஒருவர் கைது
வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;
நெல்லை:
பாளையங்கோட்டை சாந்தி நகர் மணிக்கூண்டு பகுதியில், ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ வீட்டிற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே அங்கு இருந்த களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை சேர்ந்த முருகன் மகன் முத்து சுரேசை (வயது 22) கைது செய்தனர்.
இந்த நிலையில் முத்து சுரேசுடன் சேர்ந்து கஞ்சா விற்றதாக, வண்ணார்பேட்டையை சேர்ந்த சங்கர் என்ற சங்கரபாண்டியன் (32) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.