மயிலம் அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனா்.

காரில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது;

Update: 2021-07-09 17:52 GMT
மயிலம், 

மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி தலைமையிலான போலீசார் பாதிராப்புலியூரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் 1082 மதுபாட்டில்கள் இருந்தன. விசாரணையில் காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த குழங்கலச்சேரியை சேர்ந்த கமல்(வயது 35), சவுந்தர்ராஜன்(38), காரணி தாங்கலை சேர்ந்த சந்தானம்(45) ஆகியோர் என்பதும், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை சென்னைக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்களும், அதை கடத்த பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்