சாலையோர கால்வாய்களை தூர்வார கோரிக்கை

எஸ்.புதூர் பகுதியில் சாலையோர கால்வாய்களை தூர்வார கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-07-09 17:36 GMT
எஸ்.புதூர்,

எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் மழைநீர் செல்ல வேண்டிய சாலையோர கால்வாய்கள் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், தூர்வாரப்படாமலும் உள்ள காரணத்தினால் பெய்த மழைநீர் கண்மாய்களுக்கு செல்ல வழிவகை இல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் வழிந்தோடுகிறது.
வானம் பார்த்த பூமியான இந்த பகுதியில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் நடைபெறும் சூழ்நிலையில் மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது சாலையோர கால்வாய்கள் தூர்வாராததால் மழைநீரை சேமிக்க முடியாத நிலை உள்ளன. எனவே சாலையோர கால்வாய்களை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்