அமாவாசை சிறப்பு பூஜை

கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.;

Update: 2021-07-09 17:00 GMT
கோத்தகிரி,

கோத்தகிரியில் உள்ள அம்மன் கோவில்களில் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இதில் பக்தர்கள் கலந்துகொள்வார்கள். ஆனால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 மாதங்களாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. 

இதனால் பூசாரிகள் மட்டும் கோவில்களை திறந்து பூஜைகளை நடத்தினர். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. அதன்படி நேற்று ஆனி மாத அமாவாசையையொட்டி கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. 

மேலும் டானிங்டன் கருமாரியம்மன் கோவிலிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த பூஜைகளில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே கலந்துக்கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்