தூக்குப்போட்டு பட்டதாரி வாலிபர் தற்கொலை

திருமருகல் அருகே வேலைக்கு செல்லாமல் இருந்ததை தந்தை கண்டித்ததால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-09 16:57 GMT
திட்டச்சேரி:
திருமருகல் அருகே வேலைக்கு செல்லாமல் இருந்ததை தந்தை கண்டித்ததால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பட்டதாரி வாலிபர்
திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகன் சதீஷ் (வயது 25).இவர் பி.எஸ்சி. கேட்டரிங் மற்றும் ஓட்டல் நிர்வாகம் படிப்பை படித்து விட்டு புதுச்சேரியில்  உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஓட்டல் மற்றும் தங்கும் விடுதிகள் மூடப்பட்டதால் வேலை இல்லாமல் வீட்டிற்கு வந்துள்ளார். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேலைக்கு செல்லாமல் சதீஷ் வீட்டிலேயே இருந்து வந்ததாக தெரிகிறது.இதனால் தந்தை பாலகிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல்  இருக்கிறாயே  சிரமமாக உள்ளது.எனவே வேலை க்கு செல்லுமாறு கண்டித்துள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
தந்தை கண்டித்ததால் மனமுடைந்த சதீஷ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மோட்டார் சைக்கிளில்  நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சதீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சதீசின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்