பெண்ணை ஏமாற்றிய தனியார் நிறுவன ஊழியர் கைது

திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றிய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-09 16:50 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே கருவாழக்கரை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் சதீஷ்குமார் (வயது 33). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த 28 வயது பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை நெருங்கி பழகி உள்ளார். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள சதீஷ்குமார் மறுப்பதாக அந்த பெண், மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி  வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தார்.

மேலும் செய்திகள்