முதியவர் தற்கொலை

பெரியகுளம் அருகே விஷ மாத்திரைகளை தின்று முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-09 16:40 GMT
பெரியகுளம்: 

பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 64). இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஆஸ்துமா மற்றும் நெஞ்சு வலிக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மனமுடைந்த அவர் விஷ மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்தார்.

 உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாரிச்சாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்