கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி

கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர்.

Update: 2021-07-09 16:29 GMT
மதுரை,ஜூலை.
மதுரை மாவட்டத்தில் நேற்று 45 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களில் 25 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களையும் சேர்த்து இதுவரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 897 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 61 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 35 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் 71 ஆயிரத்து 172 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 585 ஆக உள்ளது.
இதற்கிடையே, மதுரையை சேர்ந்த 2 முதியவர்கள் கொரோனா பாதிப்பால் நேற்று உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,140 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்