நயினார்கோவில் பகுதியில் பலத்த மழை
நயினார்கோவில் பகுதியில் பலத்த மழை பெய்தது.
நயினார்கோவில்,
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் பகுதியில் நேற்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளிலும் தெருக்களிலும் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. தொடர்ந்து வெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் மழை பெய்ததால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். நயினார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.