சூதாடியவர் கைது

சூதாடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-09 15:46 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்செல்வம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாத்தான்குளம் முதல் காரிக்கூட்டம் செல்லும் வழியில் உள்ள காட்டுகருவேல மரங்களுக்கு இடையில் சிலர் பணம் வைத்து சூதாடியது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்றபோது காரிக் கூட்டம் மேற்குத்தெரு அபுல்கலாம் மகன் சீனி மீரான்கனி (வயது52) என்பவரை மடக்கி பிடித்தனர். சாத்தான்குளம் சாதிக், யூசுப், சாதிக், காரிக்கூட்டம் அப்பாஸ், சிக்கந்தர் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். ரூ.ஆயிரத்து 250-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிந்து தப்பி ஓடியவர்களை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்