பழனி அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் போராட்டம்

பழனி அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-09 14:39 GMT
கீரனூர்:
பழனி அருகே வில்வாதம்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்தநிலையில் பணித்தள பொறுப்பாளர்கள் 2 பேர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களை மாற்றக்கோரியும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அருள்செல்வன் தலைமையில் ஊராட்சி அலுவலகத்தின் முன்பு நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நளினா மற்றும் அந்தோணியார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பச்சைமுத்து மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புகார் கூறப்படும் பணியாளர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்