விளாத்திகுளத்தில் லாரி மோதி மூதாட்டி படுகாயம்
விளாத்திகுளத்தில் லாரி மோதி மூதாட்டி படுகாயம் அடைந்தார்
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே குமரபுரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் தம்பையா (வயது 31). லாரி டிரைவரான இவர் நேற்று காலை மதுரை சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் லாரியில் எரிபொருள் நிரப்பிவிட்டு எட்டையபுரம் சாலையிலுள்ள லாரி நிறுத்தும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
விளாத்திகுளம் பஸ் நிலையத்தை கடந்தபோது நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கன்னிமரியாள் (75) என்ற மூதாட்டி பஸ் நிலையத்தில் இருந்து இறங்கி சாலையை கடந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி அவர் மீது மோதியது.
இதனைப்பார்த்த பொதுமக்கள் கூச்சல் இடவே லாரியை தம்பையா நிறுத்தினார். இதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்