கோவில்பட்டியில் முககவசம் அணியாத 22 பேருக்கு கொரோனா பரிசோதனை

கோவில்பட்டியில் முகக்கவசம்அணியாத 220 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது

Update: 2021-07-09 12:24 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகரசபை சார்பில் மெயின் ரோடு காமராஜர் சிலை எதிரில் ஒருநாள் கொரோனா பரிசோதனை முகாம் மற்றும் தடுப்பூசி முகாம் டாக்டர்கள் மனோஜ், ரமலா ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது.
முகாமில் கோவாக்சின் தடுப்பூசி 2-வது டோஸ் 52 பேருக்கு போடப்பட்டது. முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் காரணமின்றி சுற்றியவர்கள், பஸ், வேன், கார்களில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் சென்ற 220 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்