தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 5பேர் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி கஞ்சா விற்ற தூத்துக்குடி தாளமுத்துநகர் சுனாமி காலனியை சேர்ந்த கதிர் மகன் நிலோபர் (வயது 20), முத்தையாபுரம் பாரதிநகரை சேர்ந்த முருகன் மகன் அருண்குமார் (20), முக்கானி காந்திநகரை சேர்ந்த முருகன் மகன் பெரியசாமி (35), ஆறுமுகநேரி கணேசபுரத்தை சேர்ந்த கொம்பையா மகன் பிரேம்குமார் (20), கோவில்பட்டி வேலாயுதபுரத்தை சேர்ந்த முத்தையா மகன் சாமுவேல் (27) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 350 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.