நாகூரில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது
நாகூரில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகூர்,
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரிலும், துணை சூப்பிரண்டு சுப்பிரமணியன் அறிவுறுத்தல் படியும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாகூர் யானைகட்டி முடுக்குசந்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக நாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்துகொண்டு இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர், தெத்தி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த உதுமான் மகன் யூசுப் (வயது34) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து யூசுப்பை கைது செய்தனர். மேலும் அவரிடம் லாட்டரி சீட்டை பறிமுதல் செய்தனர்.