திருத்துறைப்பூண்டியில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2021-07-09 10:13 GMT
திருத்துறைப்பூண்டி,

சமூக ஆர்வலர் ஸ்டான் சாமிக்கு உரிய சிகிச்சை அளிக்காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் திருத்துறைப்பூண்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தமிழ் மாநில குழு உறுப்பினர் நாகராஜன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ரகுராமன், ஒன்றிய செயலாளர்கள் காரல்மார்க்ஸ், கதிரேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, முருகானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சாமிநாதன், ஜோதிபாசு மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக கூறி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்