தேவூரில் ரூ.35 லட்சத்துக்கு எள் ஏலம்
தேவூரில் ரூ.35 லட்சத்துக்கு எள் ஏலம் போனது.
தேவூர்:
தேவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நேற்று எள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் பாலிச்சம்பாளையம், காவேரிப்பட்டி, சுண்ணாம்புகரட்டூர், புள்ளாகவுண்டம்பட்டி, மோட்டூர், பொன்னம்பாளையம், செட்டிபட்டி, கொட்டாயூர், தேவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த எள்ளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், காங்கேயம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு எள்ளை போட்டிப்போட்டு ஏலம் எடுத்தனர். இதில் வெள்ளை, கருப்பு, சிவப்பு எள்கள் ஒரு கிலோ ரூ.88 முதல் ரூ.103 வரை ஏலம் போனது. மொத்தம் 500 மூட்டை எள் ரூ.35 லட்சத்துக்கு விற்பனையானது.