சேலம் மாவட்டத்திற்கு 7,400 கொரோனா தடுப்பூசிகள் வந்தன
சேலம் மாவட்டத்திற்கு 7,400 கொரோனா தடுப்பூசிகள் வந்தன.
சேலம்:
கொரோனா வைரசை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மருந்து இருப்பு இல்லாததால் சேலத்தில் கடந்த 5 நாட்களாக தடுப்பூசி போடும் பணி நடைபெற வில்லை. இந்தநிலையில் சேலம் மாவட்டத்திற்கு நேற்று 5 ஆயிரம் கோவிஷீல்டு, 2,400 கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் வந்தன.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, சேலம் மாவட்டத்திற்கு 7,400 கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் சேலம் சுகாதார மாவட்டத்திற்கு 3,500 கோவிஷீல்டு, 1,760 கோவாக்சின் தடுப்பூசிகள் வழங்கப்படும். அதே போன்று ஆத்தூர் சுகாதார மாவட்டத்திற்கு 1,500 கோவிஷீல்டு, 640 கோவாக்சின் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்று கூறினர்.