சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை: வாழப்பாடியில் அதிகபட்சமாக 36 மி.மீ. பதிவு

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. வாழப்பாடியில் அதிகபட்சமாக 36 மி.மீ. மழை பதிவாகியது.;

Update: 2021-07-08 21:50 GMT
சேலம்:
சேலத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வாழப்பாடியில் 36 மில்லி மீட்டர் மழை பெய்தது. பிற இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பெத்தநாயக்கன்பாளையம் 27, வீரகனூர் 26, ஆனைமடுவு 20, கரியக்கோவில் 18, ஓமலூர் 16, சேலம் 14.3, கெங்கவல்லி 8, எடப்பாடி 4, ஏற்காடு 3, ஆத்தூர் 3, மேட்டூர் 1.6.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 176.9 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மேலும் செய்திகள்