தப்பி ஓடிய கார் டிரைவர் கைது

சாத்தூர் அருகே 2 பேர் பலியான விபத்தில் தப்பி ஓடிய கார் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-07-08 20:36 GMT
தப்பி ஓடிய கார் டிரைவர் கைது
விருதுநகர், 
விருதுநகர் - சாத்தூர் ரோட்டில் எட்டூர்வட்டம் சுங்கச்சாவடி அருகே கடந்த 2 தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மாட்டுத் தரகர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இதில் மோதிய காரை ஓட்டி வந்தவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் நத்தத்துப்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவரின் கணவர் பாண்டியன் (வயது 44) என்பது  தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்